/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க முன்னேற்பாடு குறித்து யோசனை
/
மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க முன்னேற்பாடு குறித்து யோசனை
மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க முன்னேற்பாடு குறித்து யோசனை
மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க முன்னேற்பாடு குறித்து யோசனை
ADDED : மார் 29, 2024 05:05 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஓட்டுப்பதிவு முன்னேற்பாடு செய்வது குறித்து, மாவட்டக்குழு உறுப்பினர்களுடனான கூட்டம் நடந்தது.
இதில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது: லோக்சபா தேர்தலில், மாற்றுத்திறன் படைத்தவர்கள், தங்களது ஓட்டை பதிவு செய்ய ஏதுவாக, மாவட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவர்களுக்கு ஓட்டுச்சாவடி மையத்தை தரை தளத்தில்
அமைக்கவும், நுழைவு பகுதி முதல் ஓட்டுப்பதிவு செய்யும் மின்னணு இயந்திரம் உள்ள இடம் வரை தடையற்ற பாதை அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய
வேண்டும்.
இவர்களுக்கு உதவ பயிற்சி பெற்ற தன்னார்வலர் மற்றும் காவலர்கள் மையத்தில் இருக்க வேண்டும். அடையாள அட்டையுடன் வரும் பார்வைத்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள், உதவியாளருடன் ஓட்டுப்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.