/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கூலி தொழிலாளியிடம் பணம் பறித்த மூவர் சிக்கினர்
/
கூலி தொழிலாளியிடம் பணம் பறித்த மூவர் சிக்கினர்
ADDED : மே 11, 2025 01:35 AM
கோபி, கவுந்தப்பாடி அருகே ஆலத்துாரை சேர்ந்த கூலி தொழிலாளி நஞ்சப்பன், 62; கடந்த, 9ல் வேலைக்கு சென்றுவிட்டு, 500 ரூபாய் கூலி பணத்துடன் நடந்து சென்றார். உப்புக்காரப்பள்ளம் என்ற இடத்தில், மொபட்டில் வந்த மூவர், டீக்கடையில் இருந்து, தங்களது செல்போனை எடுத்து வந்தீர்களா என கேட்டுள்ளனர்.
அவர் பதில் சொல்வதற்குள் மூவரில் ஒருவன், நஞ்சப்பன் சட்டை பாக்கெட்டில் கையை விட்டு, 500 ரூபாயை எடுத்துக் கொள்ள மொபட் பறந்தது. நஞ்சப்பன் சத்தமிடவே அப்பகுதி மக்கள் மொபட்டை விரட்டி பிடித்தனர். மூவரையும் கவுந்தப்பாடி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் சித்தோட்டை சேர்ந்த கார்த்திக், 21, தனுஷ், 19, ஈரோட்டை சேர்ந்த சிவசங்கரன், 21, என தெரியவந்தது. நஞ்சப்பன் புகாரின்படி, மூவரையும் கைது செய்தனர்.