ADDED : மே 13, 2026 06:18 AM
ஈரோடுஈரோடு, வீரப்பன்சத்திரம் போலீசார், கனிராவுத்தர் குளம் அருகே பழைய மின்வாரிய அலுவலகம் அருகே, எஸ்.ஐ., சரவணன் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக கொல்லம்
பாளையம், திரு.வி.க., சாலை பிரசாந்த், 33, என்பவர், 4,160 ரூபாய் மதிப்புள்ள மதுபானத்தை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றபோது பிடிபட்டார்.
ஈரோடு சூரம்பட்டி எஸ்.ஐ., குணசேகரன் தலைமையில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் எதிரே வாகன தணிக்கை செய்தபோது, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி புதுவக்கோட்டை குமார், 39, என்பவர், 6,800 ரூபாய் மதிப்புள்ள மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனைக்காக கொண்டு சென்றபோது பிடிபட்டார்.
ஈரோடு டவுன் போலீசார், மரப்பாலம் அருகே சோதனையில் ஈடுபட்டபோது, மரப்பாலம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த ஆனந்தகுமார், 42, என்பவர், 500 ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்றபோது கைது செய்யப்பட்டார்.
