/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெண்ணிடம் தகாத வார்த்தை சென்னிமலையில் மூவர் கைது
/
பெண்ணிடம் தகாத வார்த்தை சென்னிமலையில் மூவர் கைது
ADDED : டிச 08, 2024 01:45 AM
சென்னிமலை, சென்னிமலை, மணிமலை கரடு பகுதியில் மின்னல் கொடி என்பவர், 20 வருடங்களாக அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசிக்கிறார். இந்த இடத்துக்கு அருகில் பாஸ்கர் என்பவர் நிலம் வாங்கி, பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார்.
மின்னல் கொடி குடியிருக்கும் புறம்போக்கு நிலம் வழியே, தடம் உள்ளதாக பாஸ்கர் கூறி பிரச்னை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மின்னல் கொடி நேற்று முன்தினம் மாலை, தனது வீட்டு முன்புறம் சிமெண்ட் சீட் போட்டுள்ளார்.
இதற்கு பாஸ்கர், 32, அவரது அண்ணன் பிரபு, 34, அவரது நண்பர் செந்தில், 46, ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து, சிமெண்ட் சீட்டை உடைத்து, தகாத வார்த்தை பேசியுள்ளனர். இதுகுறித்து மின்னல்கொடி புகாரின்படி, சென்னிமலை போலீசார் விசாரித்தனர். மூவரையும் நேற்று கைது செய்து, பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பெருந்துறை கிளை சிறையில் அடைத்தனர்.