/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொழிலாளியிடம் பணம் பறித்த சிறுவன் உட்பட மூவர் கைது
/
தொழிலாளியிடம் பணம் பறித்த சிறுவன் உட்பட மூவர் கைது
தொழிலாளியிடம் பணம் பறித்த சிறுவன் உட்பட மூவர் கைது
தொழிலாளியிடம் பணம் பறித்த சிறுவன் உட்பட மூவர் கைது
ADDED : மார் 07, 2024 02:29 AM
டி.என்.பாளையம்,
டி.என்.பாளையம் அருகே, கொங்கர்பாளையம் திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் விஸ்வநாதன், 27. தொழிலாளி. கடந்த, 5 இரவு வேலை முடிந்து, 10:30 மணியளவில் டி.என்.பாளையத்தில் இருந்து கொங்கர்பாளையம் செல்ல, குமரன் கோவில் குன்று அருகே தனது இரு சக்கர வாகனத்தில் விஸ்வநாதன் வந்துள்ளார்.
அப்போது, மூன்று பேர் ரோட்டின் குறுக்கே நின்றிருந்தனர், விஸ்வநாதனும் நின்றுள்ளார். மூன்று பேரும் சேர்ந்து விஸ்வநாதனிடம், எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய் என்று, கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். அதில் ஒரு நபர் விஸ்வநாதனின் பாக்கெட்டில் இருந்து, 1,500 ரூபாயை பறித்து கொண்டதால், அங்கிருந்து சென்றுள்ளனர்.
பங்களாப்புதுார் போலீசார் விசாரித்து, பவானிசாகர் கோழிப்பண்ணை காட்டை சேர்ந்த சுவேந்திரன், 20, அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், பழைய கேம்ப்பை சேர்ந்த பிரதாப், 24, ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
சுவேந்திரன், பிரதாப் இருவரையும் கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவன், ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை கூர்நோக்கு இல்லத்தில்
ஒப்படைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

