ADDED : செப் 03, 2026 05:45 AM
ஈரோடு:ஈரோடு மாநகராட்சி பகுதியில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவ
மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று பேர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
இது
குறித்த, மாநகர நல அலுவலர் கவுரி சரவணன் கூறியதாவது: மாநகராட்சி
பகுதியில் கடந்த இரு மாதங்களில், 6 பேர் டெங்கு காய்ச்சலால்
பாதிக்கப்பட்டனர். இதில் ஏற்கனவே மூன்று பேர் சிகிச்சை முடிந்து வீடு
திரும்பிய நிலையில், தற்போது மீதம் இருந்த மூன்று பேரும் பூரண
குணமடைந்து வீடு திரும்பினர். காலநிலை மாற்றம், சீரற்ற மழைப்பொழிவு
போன்ற காரணங்களால், மக்களுக்கு உடல்நலன் பாதிப்பு ஏற்படுவது
வழக்கம். மாநகராட்சி பகுதியில் சராசரியாக, 3 சதவீதம் பேருக்கு
சாதாரண காய்ச்சல் பாதிப்பு என்பது இருக்கும்.
மாநகராட்சி சார்பில்
டெங்கு ஒழிப்பு பணியாளர்கள், 436 பேர் களத்தில் உள்ளனர். அவர்களை
கண்காணிக்க, 60 மேற்பார்வையாளர்கள், 20 சுகாதார ஆய்வாளர்கள்
உள்ளனர். மக்களும் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக
மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
