தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோட்டில் 24 மணி நேரத்தில் மூன்று இடங்களில் தீ விபத்து

ஈரோட்டில் 24 மணி நேரத்தில் மூன்று இடங்களில் தீ விபத்து

ஈரோட்டில் 24 மணி நேரத்தில் மூன்று இடங்களில் தீ விபத்து


ADDED : பிப் 19, 2026 04:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 04:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோட்டில், 24 மணி நேரத்தில் மூன்று இடங்களில் புற்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சித்தோடு சாணார்பாளையத்தில் நேற்று முன்தினம் மதியம், 12:00 மணியளவில் 5 ஏக்கர் பரப்பிலான காலி இடத்தில் இருந்த, காய்ந்த புற்களில் தீ ஏற்பட்டது. காலி இடத்தை ஒட்டி செயல்பாட்டில் இல்லாத எஸ்.கே.பிளாஸ்டிக் குடோன் பின்புற பகுதி தீப்

பிடித்து எரிந்தது. ஆனால் அங்கு பொருட்கள் இல்லை. அங்கி-ருந்த காய்ந்த மரக்கட்டைகள், காலி சாக்கு பைகள் உள்ளிட்டவை எரிந்தன. ஈரோடு தீயணைப்பு வீரர்கள், ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

நேற்று முன்தினம் மாலை, ஈரோடு பெரிய செட்டிபாளையம் பாலிகாட்டில் பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான, 2.5 ஏக்கர் பூமியில் காய்ந்த புற்களில் தீ விபத்து ஏற்பட்டது. தீய-ணைப்பு வீரர்கள் 45 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். காய்ந்த சருகுகளை ஒன்று திரட்டி பொன்னுசாமி தீ வைத்-துள்ளார். காற்றில் தீ பரவி காய்ந்த புற்களிலும் தீப்பற்றியது தெரி-யவந்தது.இதே போல் ஈரோடு சம்பத் நகரில் உள்ள, பொது நுாலகம் அருகே காய்ந்த புற்கள் தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்த காய்ந்த மரமும் தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us