ADDED : ஜூன் 14, 2026 04:56 AM
அ நிறம் | அளவு
புன்செய்புளியம்பட்டி:பவானிசாகர்
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்த
தகவலின்படி, பவானிசாகர் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
குடியிருப்பில் வசிக்கும் சஞ்சீவ், 24, வீட்டில் சோதனை செய்ததில்
கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர். இதேபோல
புன்செய்புளியம்பட்டியை அடுத்த குரும்பபாளையம் கணபதி நகரை
சேர்ந்த குமார், 32, பன்னீர்செல்வம், 24, ஆகியோரிடம், கஞ்சா பறிமுதல்
செய்து கைது செய்தனர்.
