ADDED : மே 11, 2026 03:23 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
கருங்கல்பாளையத்தில் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு
சித்திரை திருவிழா மூன்று நாட்களுக்கு முன் நடந்தது. அப்போது இரு
கோஷ்டியினர் தங்களை முன்னிலைப்படுத்தி கொள்வது தொடர்பான
பிரச்னை, கைகலப்பாக மாறியது.
இதில் இரு தரப்பினரும் தாக்கி
கொண்டனர். இதில் அங்கிருந்த சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டது.
இது தொடர்பாக கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி அதே பகுதியை
சேர்ந்த த.வெ.க., நிர்வாகிகளான ராஜீவ்காந்தி, 22, மணிகண்டன், 22,
கவுதம், 21, ஆகியோரை கைது செய்தனர்.
