ADDED : அக் 05, 2026 04:57 AM

அ நிறம் | அளவு
அந்தியூர்:வெள்ளித்திருப்பூர்
அருகே கொமராயனுாரில் கிராவல் மண் கடத்துவதாக, அந்தியூர் வருவாய்
துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அம்மாபேட்டை ஆர்.ஐ., வளர்மதி,
கொமராயனுார் வி.ஏ.ஓ., விஜயக்குமார் உள்ளிட்டோர், தேவலன்தண்டா
நால்ரோட்டில் நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வந்த
டிப்பர் லாரியை நிறுத்தியபோது, டிரைவர் நிறுத்திவிட்டு
தப்பியோடினார். லாரியில் சோதனை செய்ததில், 3 யூனிட் கிராவல் மண்
இருந்தது. லாரியை பறிமுதல் செய்து வெள்ளித்திருப்பூர் போலீஸ்
ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். புகாரின்படி தப்பியோடிய டிரைவரை
போலீசார் தேடி வருகின்றனர்.
