ADDED : டிச 27, 2024 01:30 AM
அ நிறம் | அளவு
புகையிலை பொருட்கள்பறிமுதல்; ஒருவர் கைது
ஈரோடு, டிச. 27-
ஊஞ்சலுாரை அடுத்த, குள்ளகவுண்டன் புதுாரில் உள்ள நடராஜ் என்பவரின் பெட்டி கடையில், மலையம்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் ரெய்டு நடத்தினர். அப்போது, கடையில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், 45 பாக்கெட், விமல் பான் மசாலா, 150 பாக்கெட் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, ஊஞ்சலுார் குள்ள கவுண்டன் புதுார் மெயின் வீதியை சேர்ந்த நடராஜன், 46, மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
