ADDED : டிச 17, 2025 07:19 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு மாவட்ட மகளிர் குழு உறுப்பினர்கள் இயற்கை முறை வேளாண்மையில் அங்கக சான்றிதழ் பெற்று, விவசாயிகளாக விளைவித்த விளை பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு சந்-தைப்படுத்த, ஈரோடு பஸ் ஸ்டாண்டில் நாளை இயற்கை சந்தை நடக்க உள்ளது.
காய்கறிகள், பழ வகைகள், கீரை, மூலிகை வகைகள், அரிசி வகைகள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்படும்.
இதேபோல் மகளிர் குழு விவசாயிகளின் இயற்கை விவசாய சந்தை, சத்தி தாலுகா மாக்கினாங்கோம்பை பஞ்., அரசூர் வாரச்-சந்தை நடக்கும் இடத்தில் இன்று நடக்கிறது.
