/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பொங்கல் தொகுப்புக்கு டோக்கன் வினியோகம்
/
பொங்கல் தொகுப்புக்கு டோக்கன் வினியோகம்
ADDED : ஜன 07, 2026 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: பொங்கல் பண்டிகைக்காக, அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அரசு சார்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, 3,000 ரூபாய் ரொக்கப்பணம் வழங்கப்படுகிறது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில், ஏழு லட்சத்து, 46,528 ரேஷன் கார்டுதாரர் பயன் பெறுகின்றனர்.
இதற்காக ரேஷன் கடை ஊழியர் மூலம், வீடுவீடாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு எந்த நாள், எந்த நேரம் வர வேண்டும் என்பதை குறிப்பிட்டு, டோக்கன் வழங்குகின்றனர். இப்பணி ஈரோடு மாவட்டத்தில் நேற்று துவங்கியது. கூகலுார், லக்கம்பட்டி, வெள்ளாளபாளையம் பகுதிகளில் இப்பணிகளை கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார்.

