ADDED : மே 18, 2026 02:00 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
தினசரி மார்க்கெட்டிற்கு தினமும் ஆந்திரா, தாளவாடி, கர்நாடகாவில்
இருந்து தக்காளி வரத்தாகிறது. விளைச்சல் இல்லாததால் தற்போது
தாளவாடியில் இருந்து வரத்தாவதில்லை. மழை காரணமாக ஆந்திரா,
கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவிலேயே வரத்தாகிறது.
மார்க்கெட்டுக்கு வரத்து வெகுவாக குறைந்ததால், ஒரு கிலோ, ரூ.40 முதல்
ரூ.50 வரை விற்கப்பட்டது.
ஏற்கனவே காஸ் விலை உயர்வு, உணவு
பண்டங்கள் விலை உயர்வு, எண்ணெய் விலை உயர்வால் பாதித்துள்ள பெண்கள்,
தக்காளியின் விலையும் உயர்ந்து இருப்பது குறித்து அறிந்து அதிர்ச்சி
அடைந்தனர். இதனால் வாங்கும் அளவை குறைத்து கொண்டுள்ளனர்.
