/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு மாவட்டத்தில் 3 சிறந்த பள்ளி தேர்வு
/
ஈரோடு மாவட்டத்தில் 3 சிறந்த பள்ளி தேர்வு
ADDED : நவ 11, 2024 07:30 AM
ஈரோடு: பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும், சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து, பரிசு கேடயம் வழங்குகிறது. இதன்படி அரசு பள்ளிகளில் மாவட்டத்துக்கு மூன்று பள்ளிகள் வீதம், 38 மாவட்டங்களில், 114 பள்ளிகள் தேர்வு செய்யப்படுகின்றன. 202324 கல்வியாண்டுக்கான சிறந்த பள்ளிகள் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டன.
இதில் ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை, நத்தமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, டி.என்.பாளையம், கொண்டையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, மொடக்குறிச்சி, சாமிநாதபுரம் புதுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி என மூன்று பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் வரும், ௧௪ம் தேதி நடக்கும் விழாவில் பரிசு கேடயம் வழங்கப்படுகிறது.