/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தீப்பந்தம் ஏந்தி காங்., ஆர்ப்பாட்டம்
/
தீப்பந்தம் ஏந்தி காங்., ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 15, 2025 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், ஓட்டு திருட்டில் பா.ஜ.,வினர் ஈடுபடுவதாக கூறி, காங்., கட்சியினர் தாராபுரத்தில் நேற்றிரவு, தீப்பந்தத்துடன் பேரணி சென்றனர். கனரா வங்கி கிளை முன் தொடங்கிய பேரணிக்கு, திருப்பூர் மாவட்ட காங்., தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தலைமை வகித்தார்.
தொண்டர்கள் தீப்பந்தம் ஏந்தி சென்றனர். பா.ஜ., அரசு ஓட்டு திருட்டில் ஈடுபடுவதாக கோஷமிட்டு சென்றனர். வசந்தா ரோடு, பூக்கடை கார்னர் வழியாக சென்ற பேரணி பழைய நகராட்சி அலுவலகம் முன் நிறைவடைந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., காளிமுத்து, செந்தில்குமார், அசோக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

