/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் அனுமதி
/
கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் அனுமதி
ADDED : நவ 07, 2024 01:34 AM
கொடிவேரி தடுப்பணையில்
சுற்றுலா பயணிகள் அனுமதி
கோபி, நவ. 7-
கோபி அருகே கொடிவேரி தடுப்
பணையில், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது. குளிக்கும் வசதி எளிது என்பதால், அங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். கடந்த, 3ம் தேதி இரவு பெய்த பலத்த மழையால், பவானி ஆற்றில், 866 கன அடி மழைநீர் வந்ததால், 4ம் தேதி தடுப்பணை வர தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில் நேற்று காலை, 8:00 மணிக்கு பவானி ஆற்றில் வினாடிக்கு, 365 கன அடி தண்ணீர் வெளியேறியதால், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். அதேசமயம் குறைந்த சுற்றுலா பயணிகள் வருகையால், கொடிவேரி தடுப்பணை வளாகம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.