ADDED : ஏப் 25, 2026 05:51 AM
அ நிறம் | அளவு
கோபி, கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றுநீர் அருவியாக கொட்டு
கிறது. இதனால் குளிக்கும் வசதி எளிது என்பதால், தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சட்டசபை தேர்தலின் ஓட்டுப்பதிவால், கொடிவேரி தடுப்பணையில் நேற்று முன்தினம் மதியம் முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது.
நேற்று காலை, 8:30 மணி முதல், வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். தடுப்பணை வழியாக வெளியேறிய, 200 கன அடி தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து, குளிர்ந்தனர்.
