ADDED : ஜன 14, 2025 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ.,யாக பணியாற்றியவர் சசிகுமார், 39; இவரின் மனைவி சிவகாமி. வெள்ளோடு போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு. தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அறச்சலுார்,
வீரப்பம்பாளையத்தில் இவர்களின் வீடு உள்ளது. நேற்று காலை நீண்ட நேரமாக வீடு திறக்காததால் சந்தேகம-டைந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது சசி-குமார் துாக்கில் தொங்கி கொண்டிருந்தார். அவரை மீட்டு
ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்-டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். குடும்ப பிரச்-னையால் சசிகுமார் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

