ADDED : செப் 24, 2024 02:55 AM
ஈரோடு: அனைத்து தொழிற்சங்கத்தினர், கருப்பு கொடி ஏந்தி ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். தொ.மு.ச., மாவட்ட கவுன்சில் செயலாளர் கோபால், ஏ.ஐ.டி.யு.சி., சின்னசாமி, சி.ஐ.டி.யூ., ஸ்ரீராம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும். அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள, 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். நிரந்தர தன்மை வாய்ந்த பணியிடங்களில் ஒப்பந்தம், அவுட் சோர்சிங் பயிற்சியாளர், தினக்கூலி உட்பட சுரண்டல் முறையை ரத்து செய்ய வேண்டும். கார்பரேட் நிறுவனங்களுக்கு குறைக்கப்பட்ட செஸ் வரியை உயர்த்த வேண்டும். பழைய
ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும். அங்கன்வாடி, ஆஷா, தேசிய சுகாதார திட்டம், மதிய உணவு திட்டம் உள்ளிட்ட திட்ட ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை உத்தரவாதப்படுத்தி, நிரந்தரப்படுத்த
வேண்டும, என்பது உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தினர்.

