தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வணிகர்கள், அனைத்து கட்சியினர் திருக்கோவிலுாரில் ஆர்ப்பாட்டம்

 வணிகர்கள், அனைத்து கட்சியினர் திருக்கோவிலுாரில் ஆர்ப்பாட்டம்

 வணிகர்கள், அனைத்து கட்சியினர் திருக்கோவிலுாரில் ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 07, 2026 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 05:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கடைவீதியில் முன் அறிவிப்பு இன்றி கடைகளை அகற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அனைத்துக் கட்சிகள் மற்றும் வியாபாரிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருக்கோவிலுார் போலீஸ் ஸ்டேஷன் அருகே பாழடைந்த திருமண மண்டபம் உள்ளது. இதனை அகற்றி விட்டு வணிக வளாகம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் துவக்கி உள்ளது. இதற்காக மண்டபத்தை சுற்றி உள்ள கடைகளை அகற்ற முன் அறிவிப்பு ஏதும் இன்றி, கால அவகாசம் வழங்காமல் கடைகளை அகற்றும் முயற்சியில் ஈடுபடும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் கோத்தம் சந்த், அனைத்து வணிகர்கள் சங்கத் தலைவர் சீனிவாசன், காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் நந்தகோபால், மகாவீர் முன்னிலை வகித்தனர்.

தொழிலதிபர் கார்த்திகேயன், அ.தி.மு.க., நிர்வாகிகள் விநாயகமூர்த்தி, சுப்பு, பிரபு, சமூக ஆர்வலர் கணேஷ், ஐ.ஜெ.கே., மாநில துணைச் செயலாளர் செந்தில்குமார், பா.ம.க., செழியன், சரவணகுமார், இந்திய கம்யூ., சரவணன், பஷீர், பா.ஜ., பத்ரி நாராயணன், புவனேஸ்வரி, த.வெ.க., மாவட்ட செயலாளர் பரணி பாலாஜி, காங்., கதிர்வேல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us