ADDED : மே 30, 2026 04:56 AM
பெருந்துறை :அனைத்து வியாபாரிகள் நலச் சங்கம் சார்பாக, வணிக சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறவும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை திரும்ப பெறவும் வலியுறுத்தி, மத்திய அரசை கண்டித்து பெருந்துறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ஜோசப் தலைமையில், மாவட்ட செயல் தலைவர் நந்தகுமார் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜோசப் பேசுகையில், ''வணிக சிலிண்டர் விலை உயர்வால் ஹோட்டல், பேக்கரி, டீக்கடை, தள்ளு வண்டிகள், உணவு பொருள் விற்பனை செய்யும் கடைகள் என, 40 சதவீதம் கடைகளை அடைத்து விட்டனர். அவர்களை நம்பி இருந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள், வேலையிழந்துள்ளனர்.பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வியாபாரிகள் மட்டு
மின்றி, மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆகவே, மத்திய அரசு வணிக சிலிண்டர் விலை, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்,'' என்றார்.
மாவட்ட அவை தலைவர் ராஜா, ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, சங்க அமைப்பாளர் சண்முகம், கொள்கை பரப்பு செயலாளர் நித்திய குமார் உள்பட பலர் கலந்து
கொண்டனர்.
