/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் பூங்கா முன் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு

ADDED : நவ 01, 2025 01:04 AM
பவானிசாகர், பவானிசாகர் அணையை ஒட்டி பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா பகுதியாக திகழும் இங்கு பல்வேறு பொழுதுபோக்கு அம்சம் உள்ளது. சுற்றுலா பயணிகளின் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த, பூங்கா எதிரே பார்க்கிங் வசதி உள்ளது. இருசக்கர வாகனங்களை நிறுத்தவும் இடமுள்ளது.
ஆனால் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பலர், சாலையின் இருபுறங்களிலும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துகின்றனர். ஒரு சிலர் மட்டுமே பார்க்கிங் பகுதியை பயன்படுத்துகின்றனர்.
நெரிசலாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை எடுக்க முயலும் போது, சாலையில் செல்லும் மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கிறது.
இதனால் பூங்கா முன் செல்லும் பண்ணாரி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பார்க்கிங் பகுதிக்கு ஒதுக்கியுள்ள இடத்தில் வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.