/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மேம்பால பணியால் போக்குவரத்து பாதிப்பு
/
மேம்பால பணியால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : மே 08, 2024 02:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:நாமக்கல்
மாவட்டம் பள்ளிப்பாளையம் - திருச்செங்கோடு நெடுஞ்சாலையில் மேம்பால
பணி விறுவிறுப்பாக நடந்த நிலையில், கடந்த சில மாதங்களாக மந்தமாக
நடக்கிறது.
இதற்காக சாலையின் இருபுறங்களிலும் மண் கொட்டி
வைக்கப்பட்டிருப்பதால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து
நெரிசல் ஏற்படுகிறது. இதனால் கருங்கல்பாளையம் காவிரி ஆற்று
பாலத்திலும், கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இதனால்
ஈரோட்டில் இருந்து, சேலம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு
செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை
விடுத்துள்ளனர்.

