சோதனைச்சாவடியில் திடீர் தடை: மலை சாலையில் 'டிராபிக் ஜாம்'
சோதனைச்சாவடியில் திடீர் தடை: மலை சாலையில் 'டிராபிக் ஜாம்'
ADDED : ஆக 31, 2026 06:20 AM

சத்தி:சத்தியமங்கலத்தை
அடுத்த திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை
விதிக்கப்பட்டுள்ளது. இதனால், 12 சக்கர வாகனங்கள், அதற்கு மேற்பட்ட
வாகனங்கள் இரவில் பயணிக்க முடியாது.
இதன்படி இவை மாலை, 6;00 மணி முதல்
மறு நாள் காலை 6;00 மணி வரை அனுமதிக்கப்படுவதில்லை. அதேபோல் பஸ்,
கார்கள் இரவு 9;00 மணி முதல் காலை, 6;00 மணி வரை பயணிக்க முடியாது.
இந்நிலையில் வனத்துறை உயர் அதிகாரி உத்தரவுப்படி நேற்று முன்தினம்
மதியம் முதல், காரப்பள்ளம் வன சோதனைச்சாவடியில் அதிக எடை கொண்ட
வாகனங்களை அனுமதிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் கடும்
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திம்பம் மலைப்பாதையில் ஆசனுார் வரை
வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. வனத்துறையினர், போலீசார், அதிக எடை
ஏற்றி வந்த வாகன ஓட்டிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி
எச்சரிக்கை செய்து அனுப்பினர்.
