/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுபாலம் அமைக்கும் பணியால் புது மஸ்ஜித் வீதியில் நெரிசல்
/
சிறுபாலம் அமைக்கும் பணியால் புது மஸ்ஜித் வீதியில் நெரிசல்
சிறுபாலம் அமைக்கும் பணியால் புது மஸ்ஜித் வீதியில் நெரிசல்
சிறுபாலம் அமைக்கும் பணியால் புது மஸ்ஜித் வீதியில் நெரிசல்
ADDED : அக் 15, 2025 12:59 AM
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி, 36வது வார்டு புது மஸ்ஜித் வீதியில், ஏராளமான மொத்த மளிகை பொருள் விற்பனை கடைகள் உள்ளன. மசூதியும் உள்ளது. இப்பகுதியில் இருந்து கிழக்கு கொங்கலம்மன் கோவில் வீதிக்கு திரும்பும் மூலையில், சிறுபாலம் அமைக்கும் பணி நடக்கிறது.
இதனால் புத மஸ்ஜித் வீதியில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் விதிமீறி வரும் வாகனங்கள், கடைகள் முன் நிறுத்தப்படும் சரக்கு வாகனங்களால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி கடைக்காரர்கள் கூறியதாவது: சிறுபாலம் அமைக்கும் பணி, 25 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. பணியை விரைந்து முடித்தால், வாகன போக்குவவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைத்து விடும். இவ்வாறு கூறினர்.