/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போக்குவரத்து விதிமீறல்; 2,048 வழக்குகள் பதிவு
/
போக்குவரத்து விதிமீறல்; 2,048 வழக்குகள் பதிவு
ADDED : மே 03, 2024 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது, போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
இந்த வகையில் ஏப்ரல் மாதத்தில், ௨,௦௪௮ வழக்குகள் பதிவு செய்துள்ளனர். மது போதையில் வாகனம் ஓட்டியதாக, 40 வழக்கு; டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக, 1,205 வழக்கு; காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக, 283 வழக்குகள் என, 2,048 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விதிமீறல்களுக்கு அபராதமாக, 1.88 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளனர். அதேசமயம் மது போதையில் வாகனம் ஓட்டிய, 15 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய, வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.