/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போக்குவரத்து விதிமீறல்: 2,188 பேர் மீது வழக்கு
/
போக்குவரத்து விதிமீறல்: 2,188 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 04, 2024 07:19 AM
ஈரோடு, : ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக, 2,188 வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, ரூ.5.23 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.
ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. சில வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்-களை இயக்கி வருவதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. ஈரோடு எஸ்.பி., ஜவகர் உத்தரவின்படி, ஈரோடு தெற்கு போக்கு-வரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜ் தலைமையிலான போலீசார், கடந்த ஜூனில் ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்-டானா, பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு, காளைமாட்டு சிலை, கலெக்டர் அலுவலகம், மூலப்பாளையம் சந்திப்பு, கொல்லம்பா-ளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
மதுபோதையில் வாகனம் இயக்கியதாக, 95 வழக்கு, போக்குவ-ரத்து சிக்னலை மீறியதாக, 75,டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக, 1,222, சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக, 126, அதி வேகமாக வாகனத்தை இயக்கியதாக, 9, அதிக உயரத்திற்கு பாரம் ஏற்றியதாக 2, ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் இயக்கிய-தாக, 46, விபத்து ஏற்படும் வகையில் வாகனம் ஓட்டியதாக, 3 மற்றும் இதர வழக்குகள் என மொத்தம், 2,188 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, வாகன உரிமையாளர்களுக்கு, ஐந்து லட்சத்து, 23 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்-ளது.