ADDED : நவ 18, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, எஸ்.ஆர்.எம்.யு., (சதர்ன் ரயில்வே மஸ்துார் யூனியன்) எல்.ஆர்.எஸ்., (லோகோ ஓடும் தொழிலாளர்) சார்பில் ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் கோட்ட ஓடும் தொழிலாளர் பிரிவு செயலாளர் கார்த்திகேயன், எஸ்.ஆர்.எம்.யு., சேலம் கோட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமை வகித்தனர்.
ரயில் டிரைவர்களுக்கு டி.ஏ., கி.மீட்டருக்கு அலவன்சாக வழங்கப்படுகிறது. இதை, 25 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். இதில் வருமான வரி பிடித்தம் செய்ய கூடாது. இரவு பணியை நான்கில் இருந்து இரண்டாக குறைக்க வேண்டும். லோகோ பைலட் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

