ADDED : மே 13, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, :ஈரோடு, ரயில்வே காலனி, சாய்பாபா கோவில் பகுதியை சேர்ந்தவர் அனில்குமார், 52; ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் லோகோ பைலட் (இன்ஜின் டிரைவர்). இவரது குடும்பத்தினர் கேரளா மாநிலத்தில் வசிக்கின்றனர்.
ஈரோடு ரயில்வே காலனியில் ஒரு வீட்டில் வசிக்கிறார். ஊருக்கு சென்றவர் நேற்று காலை வீட்டுக்கு வந்தார். வீட்டில் இருந்த டி.வி., பிரிட்ஜ், பேன் மாயமாகி இருந்தது. பின்புற கதவு திறந்து கிடந்தது. அனில்குமார் புகாரின்படி சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.