ADDED : ஜன 28, 2025 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், அகில இந்திய ரயில்வே ஓட்டுனர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளை செயலாளர் பெரோஜ் ரகுமான் தலைமை வகித்தார்.
ரயில் டிரைவர்கள் மீது சட்ட விரோத குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை நிறுத்த வேண்டும். சி.வி.வி.ஆர்.எஸ்., பகுப்பாய்வின் அடிப்படையில் ரயில் டிரைவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் தண்டனை நடவடிக்கையை கைவிடக்கோரியும் கோஷமிட்டனர். ஏராளமான ரயில்வே டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

