ADDED : ஏப் 14, 2026 05:15 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், அகில இந்திய ரயில்வே ஓட்டுநர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோட்ட செயலாளர் அருண்குமார் தலைமை வகித்தார். வாரத்துக்கு நான்கு நாட்களுக்கு மேல் இரவுப்பணி வழங்க கூடாது.
முக்கிய காரணத்துக்கு விடுப்பு எடுக்க மறுப்பு தெரிவிக்க கூடாது. ஊழியர்கள் மீதான தண்டனை மற்றும் சட்ட விரோத நடவடிக்கை கூடாது. ரயில்வே கூட்ஸ் டிரைவர்களை தலைமையகத்தில் வேறு மாவட்டத்துக்கு பை-பாஸ் முறையில் அனுப்ப கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
