ADDED : அக் 18, 2026 06:41 AM
அ நிறம் | அளவு
ஈரோடு,:பாரத
சாரண சாணியர் இயக்கத்தின், தமிழ்நாடு கிளை சார்பில், ஈரோடு கல்வி
மாவட்டத்துக்கு உட்பட்ட ஈரோடு, கொடுமுடி, மொடக்குறிச்சிக்கு
உட்பட்ட அரசு, நிதியுதவி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளை
சேர்ந்த, 250 சாரண, சாரணியர்களுக்கு மாநில ஆளுநர் விருது தேர்வுக்கான
முன் பயிற்சி முகாம், ஈரோட்டில் நடந்தது.
இவர்களுக்கு
முதலுதவி பயிற்சி, கயிற்று கலை, கூடாரம் அமைத்தல், நல் ஒழுக்கம், அணி நடை
பயிற்சி, சமையல் கலை, உடல் நலம் குறித்த கேள்வி கேட்கப்படும். இதில்
சிறந்த முறையில் பதிலளிப்போர் நவம்பரில் நடக்கும் அடுத்த கட்ட
தேர்வுக்கு தகுதி பெறுவர். இதில் வெற்றி பெறும் பட்சத்தில் மாநில ஆளுநர்
விருது பெற தகுதி பெறுவர். மாவட்ட செயலாளர் ராமகண்ணன் மேற்பார்வையில் பயிற்சி முகாம் நடந்தது.
