தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காலநிலை மாற்றம் குறித்த பயிற்சி கலெக்டர், சி.இ.ஓ., பங்கேற்பு

காலநிலை மாற்றம் குறித்த பயிற்சி கலெக்டர், சி.இ.ஓ., பங்கேற்பு

காலநிலை மாற்றம் குறித்த பயிற்சி கலெக்டர், சி.இ.ஓ., பங்கேற்பு


ADDED : செப் 30, 2026 05:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் சார்பில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, 130 ஆசிரியர்க-ளுக்கு, காலநிலை மாற்றம் குறித்த உறைவிட சிறப்பு பயிற்சி, சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று தொடங்கியது.

ஈரோடு கலெக்டர் கந்த-சாமி துவக்கி வைத்தார்.ஈரோடு மாவட்டத்தில் ஈர நில பகுதியான வெள்-ளோடு பறவைகள் சரணாலயம், சத்தி புலிகள் காப்பகம், பல்லுயிர் பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த நாகமலை குன்று, எலத்துார் குளம் உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து கலெக்டர் கூறினார்.

இயற்கை, உயிரினங்களை பாதுகாத்து வாழ்ந்த பாரம்பரிய வாழ்க்கை முறைகளை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்து செல்வதில் ஆசி-ரியர்களுக்கு பங்கு உள்ளது. காலநிலை மாற்-றத்தின் தாக்கங்களை எதிர்கொள்ள, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்களி-டையே ஏற்படுத்த பள்ளி அளவில் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இயற்கை வளங்களை பாதுகாப்பதன் முக்கியத்-துவத்தை மாணவர்களுக்கு எடுத்துரைக்க வலியு-றுத்தினார். நேற்று தொடங்கிய பயிற்சி முகாம் நாளை நிறைவு பெறுகிறது. சி.இ.ஓ., மான்விழி, ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குனர் பிரசன்னா, தமிழ்நாடு காலநிலை கல்வி முன் எடுப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் அனிஷா உள்ளிட்ட பலர் பயிற்சியில் பங்கேற்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us