தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காலை உணவு விரிவாக்க திட்டம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி

காலை உணவு விரிவாக்க திட்டம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி

காலை உணவு விரிவாக்க திட்டம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி


ADDED : செப் 17, 2026 06:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2026 06:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:தமிழகத்தில் உள்ள அரசு, உதவிபெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

த.வெ.க., அரசு பொறுப்பேற்ற பிறகு, இத்திட்டத்தை 6 முதல் 8ம் வகுப்பை வரை விரிவாக்கம் செய்வதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இதையடுத்து, திட்டத்திற்கு தேவையாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், மாநகராட்சி அலுவலகத்தில் காலை உணவு திட்டத்தில் மாணவ, மாணவியருக்கு உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள, தன்னார்வலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது.

அப்போது, தன்னார்வலர்கள் தங்களது மொபைல்போனில் பி.கே.பி.எப்.எஸ் ( பெருந்

தலைவர் காமராஜர் பிரேக்பாஸ்ட் ஸ்கீம் என்பதன் சுருக்கம்) என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதில் தினசரி பணிக்கு வரும் நேரம், வருகை பதிவு கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். மாணவர்களுக்கு வழங்கும் உணவின் தரம், குறை, நிறை குறித்து ஆய்வு செய்து புகைப்படத்துடன் பதிவு செய்ய வேண்டும். மாணவர்கள் பயன்படுத்தும் தட்டு, டம்ளர், உணவு பாத்திரங்கள் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us