/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகளுக்கு பயிற்சி
/
தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகளுக்கு பயிற்சி
ADDED : நவ 09, 2024 01:36 AM
ஈரோடு, நவ. 9-
ஈரோடு எம்.பி., மற்றும் தி.மு.க., இளைஞரணி மாநில துணை செயலாளர் பிரகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
தி.மு.க., இளைஞரணி மண்டலம்-4, 5க்கான மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர், நிர்வாகிகளுக்கான சமூக வலை தளப்பயிற்சி வரும், 10ல் நடக்க உள்ளது. மாநில துணை செயலாளர் எம்.பி., பிரகாஷ், மாநில துணை செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகிக்கின்றனர்.
ஈரோடு, பிச்சாண்டாம்பாளையம், கூரப்பாளையம் பிரிவு, நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஆடிட்டோரியத்தில் அன்று காலை, 9:30 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடக்க உள்ளது.
மண்டலம்-5ல் கரூர், திருப்பூர் தெற்கு, வடக்கு, கோவை தெற்கு, மாநகர், வடக்கு, நீலகிரி மாவட்டங்களும், கரூர், திருப்பூர் வடக்கு, தெற்கு மாநகரங்களும், மண்டலம்-4 ல் ஈரோடு தெற்கு, வடக்கு மாவட்டம், ஈரோடு மாநகர நிர்வாகிகள், இதற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் பகுதியில் விண்ணப்பித்த நிர்வாகிகள் வெண் சீருடையில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.