ADDED : மார் 19, 2026 04:31 AM

அ நிறம் | அளவு
ஈரோடு: தமிழக சட்டசபை தேர்தல் ஏப்.,23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30ல் துவங்கி ஏப்.,6ல் நிறைவு பெறுகிறது.
7ல் பரிசீலனை, 9ல் வேட்புமனு திரும்ப பெறும் நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அர்பித்-ஜெயின் தலைமை வகித்தார். அப்போது, சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தகுதிகளை கண்டறிதல், வேட்பு-மனு தாக்கலின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள், வேட்பு-
மனுவில் பூர்த்தி செய்யப்பட்ட பகுதிகளை சரி பார்த்தல், வேட்பு-மனு பரிசீலனை உள்ளிட்ட பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
