ADDED : ஜூலை 22, 2026 06:17 AM
சத்தியமங்கலம்:ஈரோடு,
கோவை, நீலகிரி, திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட, 10
மாவட்டங்களை சேர்ந்த பழங்குடியினர் நலத்துறை தொடக்கப்பள்ளி
ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி சத்தியமங்கலத்தில்
நேற்று நடந்தது. மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை
அலுவலர் சுடலை மணி தலைமை வகித்தார். தனிதாசில்தார் ரவி சங்கர்,
தன்னார்வ சேவை அமைப்பு இயக்குனர் நடராஜ் முன்னிலை வகித்தனர்.
இதில்
அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு, சமூக உணர்வு சார் கற்றல்,
ஒலியியல் மூலம் வாசிப்புத் திறன் மேம்பாடு, மாணவர் மையக் கற்றல்,
வகுப்பறை மேலாண்மை மற்றும் மாணவர் ஈடுபாட்டு உத்திகள், தொடர்ச்சியான
மதிப்பீடு மற்றும் கற்றல் கண்காணித்தல், கற்பித்தல் - கற்றல் வளங்கள்
மற்றும் பயன்பாடு, ஆசிரியர் வழிகாட்டி பயன்பாடு, அனுபவ பகிர்வு
மற்றும் சிறந்த நடைமுறை, குழு செயல்பாடு மற்றும் செயல்முறை
விளக்கங்கள், கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில்,
ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
