sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/'வளமிகு வட்டார வளர்ச்சி' திட்டம் குறித்து ஈரோட்டில் பயிற்சி

'வளமிகு வட்டார வளர்ச்சி' திட்டம் குறித்து ஈரோட்டில் பயிற்சி

'வளமிகு வட்டார வளர்ச்சி' திட்டம் குறித்து ஈரோட்டில் பயிற்சி


ADDED : மார் 03, 2024 01:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2024 01:47 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு;ஈரோட்டில், மாநில திட்டக்குழு - வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தில், வட்டார வளர்ச்சி யுக்தி அறிக்கை தயாரிப்பு குறித்த மாவட்ட அளவிலான பயிற்சி நடந்தது.

கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். மாநில அளவில் சீரான வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கில், 187 வளர்ச்சி குறிக்காட்டிகளின் அடிப்படையில், மாநிலத்தில், 50 பின்தங்கிய வட்டாரங்களை தெரிவு செய்து, 'வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம்' என்ற புதிய திட்டத்தை மாநில திட்டக்குழு மூலம் அரசு செயல்படுத்துகிறது.

ஈரோடு மாவட்டத்தில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ், நம்பியூர் வட்டாரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை அங்கு நன்கு செயல்படுத்த தேவையான யுக்திகள், பணிகள் குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கினர்.

இப்பயிற்சியில் ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், சேலம் உட்பட ஒன்பது மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்றனர்.

பயிற்சி உதவி கலெக்டர் வினய்குமார், மாவட்ட பஞ்சாயத்து செயலர் சாலமோன், மாநில திட்டக்குழு வளர்ச்சி பிரிவு தலைவர் செல்வகுமார், உறுப்பினர் விஜயபாஸ்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us