ADDED : பிப் 24, 2026 10:01 AM
ஈரோடு: ஈரோட்டில் சட்டசபை தேர்தலுக்காக மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார்.
மண்டல அலுவலர்களாக ஒவ்வொரு தொகுதிக்கும் வருவாய் உள்ளிட்ட பிற துறையினர் மற்றும் அதற்கு இணையாக போலீஸ் துறையை சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி இரு துறைகளை சேர்ந்தவர்கள் தொகுதி வாரியாக ஈரோடு கிழக்கில், 21 - 21, ஈரோடு மேற்கில், 26 - 26, மொடக்குறிச்சி, 24 - 24, பெருந்துறை, 30 - 30, பவானி, 23 - 23, அந்தியூர், 28 - 28, கோபி, 29 - 29, பவானிசாகர், 30 - 30 என மொத்தம், 211 - 211 என, 422 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேர்தலுக்கு முன், தேர்தலின் போது, தேர்தலுக்கு பின் மேற்கொள்ள வேண்டிய பணிகள், தயார் நிலைகள் குறித்து பயிற்சி தரப்பட்டது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தேன்மொழி உட்பட பலர் பங்கேற்றனர்
