தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தேர்தல் நாளில் 'ஆப்'பில் தகவல் பரிமாற்ற பயிற்சி

தேர்தல் நாளில் 'ஆப்'பில் தகவல் பரிமாற்ற பயிற்சி

தேர்தல் நாளில் 'ஆப்'பில் தகவல் பரிமாற்ற பயிற்சி


ADDED : மார் 27, 2026 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2026 05:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோட்டில், பொதுத்தேர்தல் பணியை சிறப்பாக திட்டமிட்ட முறையில் நடத்துவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார். மண்டல அலுவலர்க-ளுக்கு பயிற்சி வழங்கும் நோக்கில், தேர்தல் நாளில் மேற்-கொள்ள வேண்டிய பணிகள், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் 'ஆப்' பயன்பாடு, ஓட்டுச்சாவடி செயல்முறை, மின்னணு ஓட்டுப்-பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வி.வி.பேட் ஆகியவை கையாழும் முறை மற்றும் சிக்கலின் போது மேற்-கொள்ளும் பணிகள் குறித்து விளக்கப்பட்டது. தேர்தல் பணியில், துல்லியமான தகவல் பறிமாற்றம் செய்ய யோசனை தெரிவிக்கப்-பட்டது.ஓட்டுப்பதிவு நாளில் மாதிரி ஓட்டுப்பதிவு, அவற்றை அகற்றி-விட்டு முறையான ஓட்டுப்பதிவு, 2 மணி நேரத்துக்கு ஒரு முறை பதிவான ஓட்டு விபரம், பிற சிக்கல்கள் என தொடர்ந்து தகவல்-களை வழங்க யோசனை தெரிவிக்கப்பட்டது. இதில், 303 மண்-டல அலுவலர், 28 சட்டசபை அளவிலான பயிற்சி வல்லுனர், மாவட்ட அளவிலான பயிற்றுனர், 4 பேர் என, 335 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து பயிற்சியாளர்கள் மூலம், பயிற்சி தரப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us