ADDED : மார் 27, 2026 05:09 AM

ஈரோடு:ஈரோட்டில்,
பொதுத்தேர்தல் பணியை சிறப்பாக திட்டமிட்ட முறையில் நடத்துவது
குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம்
நடந்தது.
கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார். மண்டல
அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கும் நோக்கில், தேர்தல் நாளில்
மேற்கொள்ள வேண்டிய பணிகள், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் 'ஆப்'
பயன்பாடு, ஓட்டுச்சாவடி செயல்முறை, மின்னணு ஓட்டுப்பதிவு
இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வி.வி.பேட் ஆகியவை
கையாழும் முறை மற்றும் சிக்கலின் போது மேற்கொள்ளும் பணிகள் குறித்து
விளக்கப்பட்டது. தேர்தல் பணியில், துல்லியமான தகவல் பறிமாற்றம்
செய்ய யோசனை தெரிவிக்கப்பட்டது.
ஓட்டுப்பதிவு நாளில் மாதிரி
ஓட்டுப்பதிவு, அவற்றை அகற்றிவிட்டு முறையான ஓட்டுப்பதிவு, 2 மணி
நேரத்துக்கு ஒரு முறை பதிவான ஓட்டு விபரம், பிற சிக்கல்கள் என
தொடர்ந்து தகவல்களை வழங்க யோசனை தெரிவிக்கப்பட்டது. இதில், 303
மண்டல அலுவலர், 28 சட்டசபை அளவிலான பயிற்சி வல்லுனர், மாவட்ட
அளவிலான பயிற்றுனர், 4 பேர் என, 335 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து பயிற்சியாளர்கள் மூலம், பயிற்சி தரப்பட்டது.
