ADDED : ஜூலை 02, 2026 04:28 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:தமிழகத்தில் துணை கலெக்டர் நிலை அதிகாரிகள், 29 பேர் நேற்று முன்தினம் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதில்,
ஈரோடு கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மகேஸ்வரி, மாவட்ட
வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரியாக பணியிட மாற்றம்
செய்யப்பட்டார். மாவட்ட வழங்கல் அதிகாரியாக இருந்த ராம்குமார்,
ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டார்.
கரூர் மாவட்ட
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) எஸ்.ஜெகதீசன், பவானி அருகே
ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலை வடிப்பக அலுவலராக
நியமிக்கப்பட்டுள்ளார்.
