ADDED : நவ 21, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், அந்தியூரை அடுத்த கழுதைப்பாலியை சேர்ந்த துரைசாமி மகன் கோதண்டீஸ்வரன் என்கிற ரபியா, 27; கடந்த ஒன்பது ஆண்டுகளாக திருநங்கையாக இருந்தார். ஒரு மாத்துக்கும் மேலாக யாருடனோ அதிக நேரம் மொபைல்போனில் பேசி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் சேலையால் துாக்கிட்டு கொண்டார். குடும்பத்தினர் கதவை உடைத்து அவரை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

