/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போக்குவரத்து ஓய்வூதியர் காத்திருப்பு போராட்டம்
/
போக்குவரத்து ஓய்வூதியர் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஆக 19, 2025 02:52 AM
ஈரோடு, ஈரோடு, சென்னிமலை சாலையில் உள்ள, அரசு போக்குவரத்து மண்டல அலுவலகம் முன், அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் - சி.ஐ.டி.யு., சார்பில் காத்திருப்பு போராட்டத்தை நேற்று துவக்கினர்.
ஓய்வு பெற்றோர் சங்க மண்டல தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் முருகையா, இளங்கோவன், ஜான்சன் கென்னடி, ஸ்ரீதர் பேசினர்.
தி.மு.க., அரசு கடந்த சட்டசபை தேர்தலின்போது, அரசு போக்குவரத்து கழகம் மற்றும் ஊழியர்களுக்காக அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். கடந்த, 2003 ஏப்., 1 க்கு பின் பணியில் சேர்ந்தோருக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமலாக்க வேண்டும். ஒப்பந்த பலன்களை வழங்கி, ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும். குறைந்த பட்ச ஓய்வூதியத்தை, 7 வது ஊதியக்குழு அடிப்படையில் வழங்க வேண்டும். 15வது ஊதிய ஒப்பந்த நிலுவைத்தொகையை முழுமையாக வழங்க வலியுறுத்தினர்.