/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்ட வெற்றி விழா கொண்டாட்டம்
/
போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்ட வெற்றி விழா கொண்டாட்டம்
போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்ட வெற்றி விழா கொண்டாட்டம்
போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்ட வெற்றி விழா கொண்டாட்டம்
ADDED : அக் 23, 2025 01:34 AM
ஈரோடு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் மற்றும் ஓய்வூதியர் நல அமைப்பு - சி.ஐ.டி.யு., சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் வெற்றி பெற்றதற்காக, ஈரோடு மண்டல தலைமை அலுவலகம் முன் வெற்றி விழா கொண்டாடினர்.அரசு போக்குவரத்து கழகத்தில், 2003க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்த அரியர்ஸ் வழங்க வேண்டும். ஓய்வு பெற்றோருக்கு பண பலன்கள் மற்றும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஆக., 18 முதல் மண்டல தலைமை அலுவலகம் முன் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, 61 நாட்கள் போராட்டம் நடந்த நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் அளித்த உறுதிமொழிப்படி, 62 வது நாள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதற்கான வெற்றி விழா, சி.ஐ.டி.யு., மண்டல தலைவர் இளங்கோ, ஓய்வூதியர் நல அமைப்பு தலைவர் ஜெகநாதன் தலைமையில் காசிபாளையம் பணிமனை முன் கொண்டாடினர். மண்டல தலைமை அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்று, இனிப்பு வழங்கி, தங்கள் கோரிக்கை பேச்சுவார்த்தை முடிவுகளை மாநில துணைத் தலைவர் முருகையா, சுப்பிரமணியன், மாரப்பன் ஆகியோர் விளக்கினர்.