ADDED : மார் 05, 2025 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: காலி பணியிடங்களை நிரப்பக்கோரி, டி.ஆர்.இ.யு., சார்பில் ஈரோட்டில் மூன்று இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. யூனியன் கூடுதல் கோட்ட செயலாளர் சுரேஷ் குமார், கிளை தலைவர்கள் யுவராஜ், சந்தோஷ் தலைமை வகித்தனர்.
எட்டாவது ஊதிய குழுவை உடனே அமைக்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ரயில்வே காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில், 150 ரயில்வே தொழிலாளர்கள் பங்கேற்றனர்.