நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாணிக்கம்பாளையம் தென்றல் நகரை சேர்ந்தவர் ரவிக்குமார், 30; பெரியசேமூர் முதலிதோட்டம் பகுதியில் மொபைல்போனில் பேசியபடி நடந்து சென்றார்.
அப்போது டூவீலரில் வந்த இருவர் மொபைல் போனை தட்டி பறித்து சென்றனர். ரவிக்குமார் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்தனர். இது தொடர்பாக வீரப்பன்சத்திரம் சூர்யபிரகாஷ், 23, என்பவரை கைது செய்தனர். இவர் மீது அடிதடி, போதை பொருட்கள் விற்பனை என, எட்டு 8 வழக்கு நிலுவையில் உள்ளது. மற்றொருவரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

