/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெண்ணிடம் வழிப்பறி பழங்குற்றவாளி கைது
/
பெண்ணிடம் வழிப்பறி பழங்குற்றவாளி கைது
ADDED : ஆக 15, 2025 02:11 AM
ஈரோடு, ஈரோடு, பழைய பாளையம், இந்திரா காந்தி வீதியை சேர்ந்த வியாபாரி சாந்தமூர்த்தி மனைவி நந்தினி, 42; கடந்த ஜூலை மாதம், 25ம் தேதி இரவு, பழையபாளையத்தில் இருந்து மொபட்டில் வீட்டுக்கு சென்றபோது, பைக்கில் வந்த ஆசாமி, அவர் அணிந்திருந்த நான்கு பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றான்.
சூரம்பட்டி போலீசார் ஆசாமியை தேடி வந்தனர். இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூரு, ஜெ.பி.நகரை சேர்ந்த சந்தோஷ், 35, என்பவரை பெங்களூரில் கைது செய்து நகையை மீட்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சந்தோஷ் மீது கர்நாடகாவில், 35க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் போலீஸ் ஸ்டேஷனில் உள்ளன. சேலத்தில் கே.டி.எம்., பைக்கை திருடி ஈரோடு வந்துள்ளார். அந்த பைக்கில் சென்று வழிப்பறியில் ஈடுபட்டார்.
பைக்கை ஈரோட்டில் நிறுத்தி விட்டு பெங்களூருக்கு காரில் தப்பி சென்றார். 'சிசிடிவி' கேமரா காட்சிகள் அடிப்படையில், அவரது இருப்பிடத்தை அறிந்து பெங்களூர் சென்று கைது செய்தோம். இவ்வாறு கூறினர்.