/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அடிப்படை வசதி கோரி பழங்குடியின மக்கள் மனு
/
அடிப்படை வசதி கோரி பழங்குடியின மக்கள் மனு
ADDED : ஜூன் 17, 2025 01:38 AM
ஈரோடு, பழங்குடி ஊராளி மக்கள் சங்க தலைவர் வேல்முருகன், தலைவர் மசணி தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மலைவாழ் மக்கள் மனு வழங்கி கூறியதாவது:
சத்தி தாலுகா குத்தியாலத்துார் பஞ்., அசகத்திக்கோம்பை கிராமத்தில், 30க்கும் மேற்பட்ட பழங்குடி ஊராளி குடும்பங்கள், பல தலைமுறையாக வசிக்கிறோம். வீடுகளுக்கு பட்டா வழங்க பல முறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மற்ற சிலர் பட்டா கோரி விண்ணப்பித்து பெறுவதால், எங்களை காலி செய்யும்படி வருவாய் துறையினர் நிர்பந்திக்கின்றனர். அசகத்திகோம்பையில் இருந்து காணக்குத்துார், ஒசப்பாளையம் செல்லும் தார்சாலை, 16 அடி அகலத்தில் நடைபாதையாக விடப்பட்டிருந்தது. இப்பாதையை வேறு சில நபர்கள் ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்துக்கு சிரமமாக உள்ளது. இதுபற்றியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.